மழலைகளுக்கும்
மலர்களுக்கும்
ஞாபகமிருக்கிறது...
மனிதர்களே..
இந்த வார்த்தை
உங்களுக்கு
ஞாபகமிருக்கிறதா...??
வார்த்தையாய்
ஞாபகமிருக்கும்...
வாழ்க்கையில்
ஞாபகமிருக்கிறதா..??
இதயத்தில்
ஞாபகமிருக்கும்...
இதழ்களில்
ஞாபகமிருக்கிறதா...??
மனிதர்களே...
உதடுகள்
திறவுங்கள்...
அது ஒன்றும்
உங்கள் பணப்பெட்டி அல்ல..
மனம் விட்டுப்
புன்னகையுங்கள்..
கரையப்போவது
உங்கள்
வங்கிக் கணக்கு அல்ல...!!
புன்னகை...
இது வாழ்க்கையை
நீட்டிக்க உதவும்
வாய்பாடு...
சூழ்ச்சிகளை
அறுத்தெறியும்
சூத்திரம்...
புன்னகையை
உதடுகளில்
தேக்கிவைத்து
பொய்யாய்
உதிர்க்காதீர்கள்...!
ஒவ்வொரு முறையும்
உயிரில் உற்பத்தியாகி
பூவாசம் சுமந்து
புறப்பட்டு
உதடு வழி
வழிய வேண்டும்...
புன்னகை சிந்துங்கள்..!
பணம்,
புகழ்,
பாரம்,
எதுவுமே வேண்டாம்...
பூமிக்கொரு
பூபாளம்
பாடுங்கள்...!
அன்புடன்,
வசந்த் தக்ஷினாமூர்த்தி.
vasanth..fantastic lyrics....seems to be like a great poet's lyrics......enjoyed ur tamil too..keep writing and keep posting...vazha tamil..valarga umathu kavithai thiramai.
ReplyDeleteHi Arul... thanks for your appreciation.. Its all because of friends like you, who encourages even my childish scribbles... I will write more...
ReplyDelete