Monday, April 12, 2010

என்னவளுக்கு...

என் இதயத்தின்
அந்தப்புரத்தில்
வசிப்பவளே...
இது,
உன் இதயத்தின்
எந்தப்புரத்தையோ
வாசித்துக்கொண்டிருக்கும்
உன் காதலனின்
மௌன வரிகள்...

கவிதைகளில்
பொய் எடுத்து எழுத
நான்
கவிஞன் அல்ல..
ஆனால்,
ரத்தத்தில்
மையெடுத்து எழுதும்
காதலன்...!

ஒற்றைப் புன்னகையில்
உயிர் குடிப்பவளே,
நலமா?
கற்றைக் குழலில்
எனை முடிப்பவளே
சுகமா??
என் மௌனக்குளத்தை
சலனித்தவளே,
சௌக்கியமா???

கனவுக் களத்தில்
நான்
சுமந்து சென்றவளே..
சுகமா????

நீ
தூரத்திலிருந்து
பூக்கனை தொடுத்தாலும்,
இதயம் துளைப்பதென்னவோ
இரும்புக்கனை தான்...!

ஆனால்,
அருகில் இருந்து
அமிலம் ஊற்றினாலும்
எனக்குள்
பொழிவதென்னவோ
பூமாரி தான்...!

காதலை நிரப்ப
இதயம்...!

அப்படியென்றால்,
காதலர்களை
நெருக்க
இடைவெளியா?

இடைவெளி என்பது
சோகங்களையும்
காதலையும்
இறக்கி வைக்கும்
புல்வெளியா???

இந்த இடைவெளிதானே
உனக்குள் என்னையும்,
எனக்குள் உன்னையும்
உருமாற வைத்தது...!

இந்த இடைவெளிதானே
இரு
இதயங்களையும்
ஒரே நூலில்
இருக்கிப்பிடித்தது...!

இந்த இடைவெளிதானே
நம் உறவை
இன்னும்
விசாலப்படுத்தியது...

இந்த இடைவெளிதானே
நம் காதலின்
எடையை
அதிகரித்தது..!

அப்படியானால்,
நான் இடைவெளியின்
முதல் ரசிகன்...

என் உயிர்க்கடலின்
ஆழ் பரப்பில் சஞ்சரிப்பவளே...
எத்தனையோ பெண்மை
என் மேற்பரப்பில்
வந்து போனாலும்
உன் பாதச்சுவடு
தொட்டுப்பார்க்கத்தான்
நான் உள்நோக்கி
உயிர் தேய்கிறேன்...

என் தனிமையின்
தாழ்ப்பாள்
திறந்து கொள்ளும்போதெல்லாம்,
உன் நினைவைத்
தேடித்தான்
என் கண்கள்
உயிர் நோக்கி
ஊர்வலம் போகிறது...

நான்
கண்ணயரும்
இரவுகளிலெல்லாம்
இமை விளிம்பில்
நீ இருந்து
விசிறி விடுவதாகவே
தோன்றும்...!

என் இதயத்தை
தூசு தட்டுகிற
அந்திகளில் எல்லாம்,
பொசுக்கென்று
அவிழ்ந்து விடும்
உன்
ஞாபக மழையில்
அவசரமாய்
என் விழிகள்
அருவியாகிவிடும்...

அப்போதெல்லாம்...
காற்றாய்
நீ வந்து
கண்ணீர் துடைப்பதாகவே
நினைத்துக்கொள்வேன்..

சோகத்தின்
உச்சத்தில்,
வெயிலில்
புரண்டு துடிக்கின்ற
புழுவாய்
நெளியும் போதெல்லாம்,
உன் புகைப்படம் தான்
என் பூந்தோட்டம்..!!

நான்
ஒவ்வொரு நிமிடமும்
கண்மூடி கண்மூடி
உன்னை நினைத்துக்கொள்கிறேன்..!

யாருக்கும் தெரியாமல்
ரகசியமாய்
என்னை
நனைத்துக் கொள்கிறேன்...!

என் உணர்ச்சியின்
பாதியை
கவிதையாய்
இறக்கி வைத்திருப்பது
உன்
கண்களுக்கு தெரியும்...

மீதியை
கண்ணீராய்
இறைத்து முடித்திருக்கிறேன்..
உன்
இதயத்திற்கு தெரியுமா??


அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

4 comments:

  1. இதயம் துளைப்பதேன்னவோ-typo!

    Room pottu yosipeengala? again is there a girl and does she know about your love? (I know it's too early for me to nose into your P's and Q's...but can't help it.:) )

    ReplyDelete
  2. Hi Viji.. I am happy to learn that you like my writings. Mmm.. I have to tell you about the girl you asked for.. Ya,there is a girl in my life, but I am yet to meet her.. yet to listen her mellifluous voice, yet to see her beautiful eyes.. She is somewhere around the corners of universe..I love to write the best and unwritten poem, just for her, will compose unheard song for her.. Living a bohemian life with a hope that Time will fetch her soon.

    ReplyDelete
  3. hayyo! yebba...we all wait for our better halves at one point of time, don't we? at the right moment, she will flash before you...like a lightning.

    hmm...BTW, you haven't changed the typo-"இதயம் துளைப்பதேன்னவோ"?

    you are great with tamil and english as well. and do u compose? are u a musician too?

    ReplyDelete
  4. Hi.. ok.. ok... I too wait for my better half like everybody..(appuram edhukku ippadi polambura nu kekkarkingala?? theriyalappa..)

    Sorry for not carried out the typo.. corrected it now.. Thanks viji. (neenga ennoda 3rd std tamil teacher maadhriye romba strict...... )

    ya.. I m a self taught (arakora) musician.. composed few songs..

    ReplyDelete