Monday, April 12, 2010
வேறென்ன வேண்டும்...
எவர் விழியும் காணாத
ஒரு தீவு வேண்டும்...
உணவற்று கனவற்று
எனைத் தேட வேண்டும்!
எவர் சுவடும் தீண்டாத
ஒரு பாதை வேண்டும்...
உலகோடு ஒட்டாமல்
நான் போக வேண்டும்!
மனித ஒலி கேட்காத
புது பூமி வேண்டும்...
நான் மட்டும் புல்லோடு
கவி பேச வேண்டும்!
தவமேதும் கலைக்காத
தனிக்காடு வேண்டும்...
உலகத்து உயிர்க்கெல்லாம் - நான்
தவம் செய்ய வேண்டும்!
நில்லாத காற்றோடு
நான் ஓட வேண்டும்...
இல்லாத அவளுக்காய்
மறைந்து அழ வேண்டும்!
என் ஜீவன் தலை சாய
ஒரு பெண்மை வேண்டும்...
மலர் கூட அதிராமல்
அவள் பேச வேண்டும்!
மழையோடு காலாற
நடை போட வேண்டும்...
நிலவோடு முழு இரவும்
தமிழ் பேச வேண்டும்!
சிலு சிலுக்கும் இலையோடு
கை கோர்க்க வேண்டும்...
சில்லென்ற இரவோடு
சிந்திவிழ வேண்டும்!
உடைந்து விழும் பனித்துளியை
உயிர் தாங்க வேண்டும்...
உடலெங்கும் களைப்பா?
நலம் கேட்க வேண்டும்!
பறவைகளின் சிறகிற்கு
சிக்கெடுக்க வேண்டும்...
குருதி படிந்த புறவுகளை
குளிப்பாட்ட வேண்டும்!
வலை சேர்ந்த மீனையெல்லாம்
கடல் சேர்க்க வேண்டும்...
வழி தேடும் மனிதர்களை
கரை சேர்க்க வேண்டும்!
தேனெடுக்கும் வண்டோடு
சுற்றி வர வேண்டும்...
மலரோடு கவி கலக்க
பாஷை ஒன்று வேண்டும்...!
என் சிறகுகளை உரசாத
செவ்வானம் வேண்டும்...
சிறு பறவை காண்கின்ற
சுதந்திரங்கள் வேண்டும்!
கண்ணோடு தோகையரை
கழற்றி விட வேண்டும்...
என்னோடு துணைக்கு வர
கவிதை தான் வேண்டும்!
பாலையிலும் பூப்பூக்கும்
கவியுணர்வு வேண்டும்...
பனிமலையில் தீ உரசும்
தமிழ் வண்மை வேண்டும்!
எவர் என்னை எதிர்த்தாலும்
நான் வெல்ல வேண்டும்...
மேடைகளில் வாள் சுழற்றும்
வார்த்தைகளே வேண்டும்!
தரிசான நிலமெல்லாம்
தளிர் பூக்க வேண்டும்...
உழைக்கின்ற உயிர் எல்லாம்
குளிர் காய வேண்டும்!
உதடு மட்டும் சிரிக்காத
நண்பர்கள் வேண்டும்...
அவர் தோளில் சாய்ந்து என்றன்
உயிர் போக வேண்டும்!
உலகத்து ஞானங்கள்
நான் காண வேண்டும்...
கண்டவற்றை சிந்தாமல்
கவியாக்க வேண்டும்!
மல்லார்ந்து படுக்க
ஈரப்புல்வெளி,
உயிர் கழுவிக்கொள்ள
ஒற்றைப் பனித்துளி,
மனம் விட்டுக் குளிக்க
சிந்தும் மழைத்துளி,
கடைசி காலம் வரை
காதலியின் சிரிப்பொலி...!
இதிலொன்றும் இழக்காத
ஒரு வாழ்க்கை வேண்டும்!
ஓர் நாள் தான் வாழ்ந்தாலும்
இவை எல்லாம் வேண்டும்...!
அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.
Subscribe to:
Post Comments (Atom)
"உலகத்து உயிர்க்கெல்லாம் - நான்
ReplyDeleteதவம் செய்ய வேண்டும்!"- How can I describe this anything other than humanity enmeshed with generosity? If this thought prevails on earth, we don't have to live with the fear of another 9/11!
I wonder what's wrong with their genome and what makes them to hurt people!
"என் ஜீவன் தலை சாய
ஒரு பெண்மை வேண்டும்..."
then why do you expect your "vennila" to change her vanam?
Hi.. Really love your comments. You are the first one linking my one article with another.I perceived that people will no longer remember even the recently read one, and every poem ends with the full stop. Mmm..its irony in human life, we will dream of certain things, but we hesitate or we will not be in the position to accept when it comes in real life...
ReplyDeleteNo...Irony is not pre-ordained. It is something we cook for ourselves....like a smoked dosa or chapathi.
ReplyDeleteWe will dream of things only with the utmost desire to achieve it. I hope u got me and i hope you will pursue ur dream.
Yes Boss... I go with you..
ReplyDelete