Monday, April 12, 2010

இது கல்வாரிப் பயணமடி...

வாழ்க்கை தேடும் வாலிபனிடம்,
வாலிபம்
தேடும் வான வில்லுக்காய்...

பெண்ணே!
நான்

போர்க்களத்தில்
வாள் சுழற்றிக்கொண்டிருக்கிறேன்!
நந்தவனத்தில்
நின்று கொண்டு
பூக்கனைத் தொடுக்காதே...!

வாழ்க்கைப்
படகு
தேடி
நெருப்பாற்றில்

நீந்திக்கொண்டிருக்கிறேன்
..
என் முதுகில்
இன்னொரு
உயிரா??
வேண்டாம்...

நீ
வாலிப
தேசம் செல்ல
நான்

உல்லாசக்கப்பல்
அல்ல...

நினைவில்
கொள்!
நீ

காதல்
முத்தெடுக்க
கானல்
நீரில்
மூச்சடக்குகிறாய்...!

நான்
வேரில்லாதவன்...
என்
தோளில்
ஊஞ்சல்
கட்ட
ஆசைப் படாதே...!

உனக்கு
காதல்
புரியும்..
ஆனால்
,
என்னைப்
புரியாது...

என்
வாழ்க்கை
பாலைவனப்

பயணம்
கடந்து
சூரியன்
தொடுவது!

பன்னீர்ப்
பூவே
உன்

கனவிதழ்களை

சுருக்கிக்கொள்
...!

என்
பாதை
கருப்பிரவில்
உறங்கி
நெருப்புத்
துண்டு விழுங்கி
நித்தம்
தொடரும்
ரத்த
யாத்திரை..!

அடிப்
பனித்துளியே,
உன் புளகாங்கிதம்
புல்லோடு
மட்டும் இருக்கட்டும்..
புயலோடு
வேண்டாம்...!

எப்படி
?
எப்படி
முடியும்?
கண்ணீருடன்

பன்னீர்

சமரசம்
செய்து கொள்ள
எப்படி
முடியும்?

ரோசாப்பூ

நெருப்புடன்

கைகோர்க்க நினைக்கிறதே....
எப்படி
முடியும்???

நான் மேகம்...
என்னை
விட்டு விடு..
வானவில்லில்
படுத்து ஓய்வெடுத்தால்
என்னால்
வாழ்க்கை
தேட
முடியாது...

நான்
காற்று...
ஆம்
,
சுவர்களுக்குள்

சுவாசிக்க
விரும்பாத காற்று...
மலர்களின் வாசனையில்
மயங்கி
நிற்க
மனமில்லை
...

உன்
பிஞ்சுப்பாதங்களை
பின்னோக்கி நகர்த்து...
என்னை
மறந்து விடு....

நீ
நிழலை
நேசித்துக்கொண்டிருக்கிறாய்
..
நீ பாலைவனத்தில்
பூப்பூக்கப்
பார்க்கிறாய்...

சூறாவளிச்

சுழல்
காற்றில்
புல்லாங்குழல்

வாசிக்க
ஆசைப் படுகிறாய்....

சூரியனுக்குள்

வசந்த
காலம் தேடுகிறாய்...

உன்
முல்லைப்
பாதங்களை
முள்
பாதையில்
நடக்க
விட
எனக்குச்
சம்மதமில்லை...

பஞ்சு மெத்தைகளில் தான்
நீ
பழக்கப்பட்டிருப்பாய்...
கத்தி
முனை
உனக்கு
சரிப்பட்டு வராது...

என்
தேடல்
முடியும்
வரை
காத்திருக்காதே
...

தேடலுக்கு
முன்
நானே
முடிந்து போகலாம்...

வெண்ணிலவே...
உன் வானத்தை மாற்றிக்கொள்...

அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

5 comments:

  1. Is there a vennila? and how do u expect her to change her sky??
    after all, there is one sky and one vennila.

    ReplyDelete
  2. Hi.. Thanks for comments.. Its all about spinning around imaginary axis yaar...

    ReplyDelete
  3. So u have a imaginary moon?
    sollunga...unga hush hush secret pathi..

    ReplyDelete
  4. சொல்லத்தான் நினைக்கிறேன்...

    ஆனால்,
    அவளைப் பற்றி
    எழுதும்போது மட்டும்
    வார்த்தைகள் எல்லாம்
    வன வாசம் போய்விடுகிறது..

    என் தமிழ்
    கொஞ்சம்
    தடுமாறுகிறது...

    என் கற்பனை வளம்
    களவாடப்பட்டு
    விடுகிறது...

    வார்த்தைகளுக்காய்
    தவம்
    செய்யப்போனவன்
    தற்காலிகச்
    சவம்
    ஆகிப்போகிறேன்...

    ஆயினும்
    முயற்ச்சிக்கிறேன்...

    ReplyDelete