Friday, May 21, 2010
மழை...
நீ
அவனா?
அவளா?
அவனுக்கு
அவளாகவும்,
அவளுக்கு
அவனாகவும்
உன்னால் மட்டும்
எப்படி
உருமாற முடிகிறது ???
---
---
நீ
காலன்
அனுப்பி வைத்த
காதல் மருத்துவனா??
சில்லு சில்லாய்
உடைந்துபோன
உறவுகள் கூட
சில்லென்ற
உன் வரவால்
சிலிர்த்தெழுந்து விடுகிறதே..!!
நீ
என்ன
திரவ மந்திரமா??
இதயத்தின்
அடித்தட்டில்
இறந்து கிடக்கும்
பெயர் தெரியாத
உறவின்
நினைவுகளைக் கூட
தொடாமல்
தொட்டு எழுப்பி
அவசரமாய்
ஒரு
ரகசியப்புன்னகை
பூக்கச் செய்கிறாய்...!
நீ
வானம் தெளித்துவிடும்
தியான திரவமா??
நீ
வரும்போது மட்டும்
காதலர்கள்
தன்னிலை மறந்து
நினைவுச் சிலையாகிப்
போகிறார்கள்....!!
---
---
நீ
என்ன
காயசண்டிகையின்
மாயப் பாத்திரமா??
வேரோடு விழுந்து
ஆறாக ஓடினாலும்
தீராத பந்தமாய்
மீண்டும் நீ
மழைகிறாய்!!!
---
---
பாவம்
நீயும்
பெண் தான்...
ஆம்...
கவிஞர்களுக்கு
கருவாகிக் கருவாகிக்
களைத்துப் போய்விட்டாய்...
ஆயினும்
அவர்கள் விடுவதாயில்லை...
---
---
அப்படி என்ன
உங்களுக்குள்
அந்தரங்க உறவு??
உன் பிரிவு
தாளாமல்
முகம் கருத்து
மேக மகள்
சோகமாகிப்போகிறாள்???
---
---
சமத்துவத்தின்
சாராம்சமே...!
சுயநலம் கடந்த
பொதுமனம் கொணர்ந்த
ரகசியம் சொல்வாயா??
மனிதர்களுக்கும்
அந்த
மந்திரம் சொல்வாயா??
வருணன்
வரம் கொடுத்த- அந்தத்
தருணம் சொல்வாயா...!!?
பிரபஞ்சத் தத்துவத்தை
ஒற்றைத் துளிக்குள்
எப்படி அடைத்தாய்??
குறுகக் குறுக
யோசித்து
இறுகிப் போன - மனித
இதயங்களை
எப்படி உடைப்பாய்...??
---
---
என்
முதல் ஸ்பரிசம்
நீ
எப்போது
கண்டாய்??
என்
முதல் கண்ணீர்
நீ
எப்போது
கரைத்தாய்???
உனக்கும்
எனக்கும்
நேசப்பூ
பூத்தது எப்போது???
என்
இமைக்குள் இறங்கி
எப்போது
என் இதயம் தொட்டாய்??
தொடக்கம்
நினைவில்லை...
எழுத்தை
முடிக்கவும்
மனமில்லை...
ஆயினும்
முடிக்கிறேன்...
கருவறையினை
கடந்த பின்னும்
உன்னில் தான்
நான் நனைந்தேன்...
கல்லறையை
அடைந்த பின்னும்
உன்னில் தான்
நான் நனைவேன்...
வா..
காத்துக் கொண்டிருக்கிறேன்...
அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.
Subscribe to:
Post Comments (Atom)
Hi vasanth
ReplyDeletefantastic lyrics...excellent imagination power..u brought this poem in differnt way..why don't you try to publish a book with all ur poems?
i ve some doubts...
அப்படி என்ன
உங்களுக்குள்
அந்தரங்க உறவு??
உன் பிரிவு
தாளாமல்
முகம் கருத்து
மேக மகள்
சோகமாகிப்போகிறாள்???
intha lines la oru muranpadu irukku..actally megam karuttha pirakuthan mazhai varum...so mazhi yoda privu thangama megam karuppathillai..i mean mazhai varuvathukku munnadi than megam karrukkum...vanthu sendra pin mazhi yin pirivu thangamal oru velai mega magal velutthu vidalam...am i right?
காதலன் சில நாட்களில் பிரியப் போகிறான்...
ReplyDeleteகாதலிக்கு விஷயம் தெரிந்து விடுகிறது...
விஷயம் தெரிந்த காதலியின்
முகத்தை ஒரு கணம் கற்பனை
செய்து பாருங்கள்...
அவளின் தவிப்பு,
இருதயத்தின் துடி துடிப்பு,
வெல்ல முடியாத
அவளின் விழிஈர்ப்பு விசையை,
பூவிஈர்ப்பு விசை
வென்று விட்டதைப்போல,
முன் நின்றாலும் அவள் மண்
பார்க்கும் ஒரு தப்பிப்பு...
இருதயம் உருகி
இரு விழி வழியும்...
உள் சென்ற சுவாச உஷ்ணம்
உயிர் வரை உரசும்...
ஒருவரும் அறியாமல்
உள் நெஞ்சு மௌனமாய் நொறுங்கும்..
சொல்ல வந்த வார்த்தைகள்
தொண்டைக்குழிக்குள்
மரித்துப்போகும்...
நினைவுகள் மட்டும்
நில்லாமல் கொல்லும்...
இதைத்தான் அடியேன் சொல்ல நினைத்தேன்...
காதலன் பிரிந்த பிறகு
காதலிக்கு இருக்கும்
மன நிலையை சொல்ல
என் வார்த்தைகளுக்கு
வலுவில்லை.... மன்னியுங்கள்...